வாவ்… இந்தியன் தாத்தா – கமல் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து

செவ்வாய், 15 ஜனவரி 2019 (06:17 IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்டர் நேற்று இரவு வெளியானது.

கமல் அரசியலில் இறங்கிய பின்னர் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதனால் அவர் ஏறகனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படமே அவரது கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டது.

அறிவித்து ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. தற்போது ஒரு வழியாக ஜனவரி 18 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்காக இந்தியன் 2 வின் முதல்பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது, போஸ்டரில் கமல் இந்தியன் படத்தின் சிறப்பம்சமான வர்மக்கலை போஸோடு நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் படங்களில் இதுவரை ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜே இசையமைத்து வந்த நிலையில் முதல்முறையாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியன் படத்தின் வசனங்களை சுஜாதா எழுதியிருந்தார். இந்தியன் 2 படத்திற்கு எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் லஷ்மி சரவணக்குமாரோடு பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து சேர்ந்து எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஐஸ்வர்யா தத்தாவின் அடுத்த பட டைட்டில் இதுதான்