Publish Date: Thu, 23 Jun 2022 (18:13 IST)
Updated Date: Thu, 23 Jun 2022 (18:17 IST)
பிரபல இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது. இதனை நிரூபிப்பது போல் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நிலையில் இந்த படத்தில் ஆக்ரோஷமாக எதிரிகளை அடித்து நொறுக்கும் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் என தெரிகிறது
இந்த போஸ்டர் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது