தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ கண்டுபிடித்தது
இதனையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இது குறித்து விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
இதனை அடுத்து முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் நேற்று கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது