தமிழகம் முழுவதும் உள்ள சிறார்கள், இளைஞர்களை கவர்ந்த நருட்டோ தொடரின் அடுத்த சீசன்கள் தமிழில் ஒளிபரப்பாகும் தேதியை சோனி யாய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜப்பானிய அனிமே தொடர்களுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஜப்பானின் புகழ்பெற்ற அனிமெ தொடர்களில் ஒன்று மசாஷி கிஷிமோட்டோ எழுதி மாங்கா காமிக்ஸாக வெளியான நருட்டோ தொடர்.
மொத்தம் 700+ எபிசோடுகள் உள்ள இந்த நருட்டோ தொடரின் க்ளாசிக் சீசனின் 200+ எபிசோடுகள் கடந்த ஆண்டு சோனி யாய் சேனலில் வெளியாகி சிறுவர்கள், இளைஞர்கள் இடையே பெரும் வைரலானது. டப்பிங் கலைஞர்களான சாய் சுஜித் மற்றும் அவரது குழுவினர் தமிழ் டப்பிங் பேசியிருந்தனர்.
இந்நிலையில் நருட்டோவின் அடுத்த கதைகளமான நருட்டோ ஷிப்புதென் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் இருந்த வருகிறது. இந்நிலையில் சோனி யாய் சேனல் நருட்டோ ஷிப்புடென் தமிழில் மார்ச் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக விளம்பரப்படுத்தியுள்ளது. இது அனிமே ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.