Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுக்கு "ஏ" சர்ட்டிபிக்கெட்தான்! இப்படி பொளக்குறான்! – பேட்மேன் ட்ரைலர்!

இதுக்கு
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (10:30 IST)
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ ரசிகர்களின் நம்பர் ஒன் நாயகனான பேட்மேன் படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படங்களை போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் டிசி சார்பாக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். வழக்கமாக சாண்டியாகோ காமிக்ஸ் விழாவில் தங்களது புதிய ட்ரைலர்களை டிசி வெளியிடும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிசி பேண்டம் என்ற ஆன்லைன் நிகழ்வு வழியாக ட்ரைலர்களை வெளிட்டு வருகிறார்கள்.

டிசி சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்தடுத்து வெளியாக உள்ள ஐந்து திரைப்படங்களின் ட்ரெய்லர்களை ஒரே நாள் இரவிற்குள் ரிலீஸ் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது டிசி. அதில் சூப்பர்ஹீரோ ரசிகர்களின் விருப்பமான பேட்மேன் ட்ரய்லரும் ஒன்று.

 ஹாலிவுட் இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கும் இந்த பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ளார். வழக்கமான பேட்மேன் திரைப்படங்களை விட இந்த படத்தில் ரத்த காட்சிகளும், வன்முறை காட்சிகளும் அதிகமாக உள்ளது. ட்ரெய்லரிலேயே வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளது. வழக்கமான பேட்மேன்களை விட மோசமானவராக மேட் ரீவ்ஸின் பேட்மேன் இருப்பார் என ரசிகர்கள் இடையே பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான டிசியின் ஜோக்கர் திரைப்படத்திற்கு வன்முறை காட்சிகளால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் பேட்மேனுக்கு இந்தியாவில் ஏ சான்றிதழே கிடைக்கும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம் நின்று போனதும் போட்டோ ஷூட் நடத்தி இயக்குனர்களுக்கு துண்டில் போடும் பூர்ணா!