டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ் – ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து !

வியாழன், 9 மே 2019 (11:43 IST)
டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள அவெஞ்சர்ஸ் படத்துக்கு டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சாதனைப் படைத்து வருகிறது. வெளியாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையான 2 பில்லியன் அமெரிக்க டாலர் சாதனையை முறியடித்துள்ளது. உலக அளவில் அதிக சாதனைப் படைத்த படங்களின் பட்டியலில் இப்போது அவதாருக்குப் பின் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இது குறித்து டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது டிவிட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் ‘ நிஜ டைட்டானிக்கை ஒருப் பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்து விட்டது. திரைப்படத்துறை எவ்வளவு பெரிதாகியுள்ளது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துகள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ் 3 போட்டியாளர்களின் தேர்வு தொடங்கியாச்சு! முதல் போட்டியாளரே இவங்க தான்!