Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வில்லியாக களமாடும் ஆல்யா பட்.. வொண்டர் வுமனுக்கே டஃப்! – அனல் பறக்கும் Heart of Stone ட்ரெய்லர்!

Advertiesment
Heart of stone
, செவ்வாய், 20 ஜூன் 2023 (11:56 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கெடாட் மற்றும் இந்திய நடிகை ஆல்யா பட் நடித்துள்ள Heart of Stone படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



ஹாலிவுட்டில் ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், வொண்டர் வுமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கேல் கெடாட். இவர் நடிப்பில் ஹாலிவுட் இயக்குனர் டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Heart of Stone. இந்த படத்தில் இந்தி நடிகை ஆல்யா பட் முக்கியமான வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

உலகையே அழிக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்த ஆர்க் என்னும் ஆயுதத்தை கேல் கெடோட் குழுவினர் பாதுகாக்க அதை ஆல்யா பட் திருடி சென்று விடுவதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. ஆல்யா பட் அந்த ஆர்க்கை கொண்டு என்ன செய்ய போகிறார்? கேல் கெடாட் குழுவினர் அதை தடுத்தார்களா? என்பது சுவாரஸ்யமான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

படத்தின் ட்ரெய்லரை காண..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜொலிக்கும் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பட்டாணி!