Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பேட்மேன் படத்தை இயக்குவது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:20 IST)
பேட்மேன் படத்தை பலர் இயக்கியிருக்கிறார்கள். கிறிஸ்டோபர் நோலன் இயக்குனர் இருக்கையில் அமர்ந்த பிறகே பேட்மேனுக்கு ஒரு வெளிச்சம் கிடைத்தது. பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் மூன்றும் நோலனின்  இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டடித்தன. அதில், தி டார்க் நைட் பேட்மேன் படங்களிலேயே மாஸ்டர் பீஸ்.

 
இனிமேல் பேட்மேன் படங்களை இயக்குவதில்லை என்று நோலனும், நடிப்பதில்லை என்று கிறிஸ்டியன் பேலும் முடிவெடுத்த  பிறகு, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் தி ஜஸ்டிஸ் படத்தில் பென் அப்லெக் பேட்மேனாக நடித்தார். இயக்கியது 300 படத்தை இயக்கிய ஸாக் ஸ்னைடர்.
 
தி பேட்மேன் என்ற பெயரில் புதிய பேட்மேன் படம் தயாராகிறது. இதில் யாரை இயக்குனராகப் போடலாம் என்று யோசித்து  மேட் ரீவ்ஸை ஒப்பந்தம் செய்துள்ளனர். டான் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தை இயக்கியவர் இவர்தான்.  பேட்மெனாக பென் அப்லெக்கே நடிக்கிறார்.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments