கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த அதிரடி - ஓபன்ஹெய்மர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:19 IST)
ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படமான ஓபன்ஹெய்மர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் இன்செப்ஷன், டன்கிர்க், டார்க் நைட் உள்ளிட்ட பிரபலமான பல படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். கடந்த ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களை குழப்பும் வகையில் பல அம்சங்களை இணைக்கும் உத்தியை கையாள்பவர் கிறிஸ்டபர் நோலன்.
 
தற்போது கிறிஸ்டோபர் நோலன் அணுகுண்டு பரிசோதனையை மையப்படுத்திய ஓபன்ஹெய்மர் ப்ராஜெக்டை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓபன்ஹெய்மர் என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டோனி ஆகிய பலர் நடித்துள்ளனர்.
 
இந்த படம் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து ஜூலை 21,2023ல் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments