Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சும்மாதான வாங்குன அடி… ஆஸ்கர் வாய்ப்புக்கு கும்பிடு போட்ட கிறிஸ் ராக்!

Advertiesment
சும்மாதான வாங்குன அடி… ஆஸ்கர் வாய்ப்புக்கு கும்பிடு போட்ட கிறிஸ் ராக்!
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (10:33 IST)
தற்போது மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளார் என தகவல்.


ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற போது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது. விழா மேடைக்கு சென்ற தொகுப்பாளரை தாக்கியதால் இந்த நடவடிக்கை என்றும் அகாடமி விளக்கம் அளித்தது.

தன் மீதான இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் அறிவித்த நிலையில் இது சம்மந்தமாக அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தகக்து. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், 2023 ஆம்  ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளராக பணியாற்ற வந்த வாய்ப்பை வேண்டாம் என உதறி தள்ளியுள்ளார் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக். இந்தாண்டு மார்ச்சில் நடந்த ஆஸ்கர் விழாவில் தனக்கு நடந்த அசவுகரியத்தை மனதில் வைத்து இந்த வாய்ப்பை அவர் புறக்கணித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் அஜித்- விஜய் படங்கள் ரிலீஸ்?