Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனை சந்தித்த அட்லியும், ப்ரியா அட்லியும்: வைரலாகும் புகைப்படங்கள்!

கமல்ஹாசனை சந்தித்த அட்லியும், ப்ரியா அட்லியும்: வைரலாகும் புகைப்படங்கள்!
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:53 IST)
கமல்ஹாசனை சந்தித்த அட்லியும், ப்ரியா அட்லியும்
உலகநாயகன் கமலஹாசன் அவர்களை இன்று இயக்குனர் அட்லீ மற்றும் அவருடைய மனைவி பிரியா அட்லீ சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அட்லியின் மனைவி பிரியா அட்லி தயாரித்து அந்தகாரம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படம் வெற்றி பெறும்போதும் கமல்ஹாசனிடம் ஆசி வாங்கும் பழக்கத்தை உடைய அட்லி, அந்தகாரம் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து மனைவி மற்றும் படக்குழுவினர்களை அழைத்துக்கொண்டு கமல்ஹாசனை சந்தித்தார் 
 
கமல்ஹாசன் படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். சமீபத்தில் வெளியான அந்தகாரம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் ஓடிடியில் இந்த படம் மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ''ரீல்'' மகள் ஹீரோயின் அவதாரம்....ரசிகர்கள் வாழ்த்து