Publish Date: Mon, 16 May 2022 (09:11 IST)
Updated Date: Mon, 16 May 2022 (09:13 IST)
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள லெ மஸ்க் என்ற படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவிலிருந்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார்.
இசையமைப்பது தவிர்த்து சமீபத்தில் 99 சாங்ஸ் போன்ற படங்களை தயாரித்தார் ஏ.ஆர்.ரகுமான். தற்போது முதன்முறையாக ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் இசை புயல். 30 நிமிடங்கள் கொண்ட அந்த குறும்படம் “லெ மஸ்க்” கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.