அதற்கு அஜித் பெண்ணாக மாறவேண்டும்! சிவகார்த்திகேயன் பட நடிகையின் ஷாக்கிங் பதில்!

செவ்வாய், 28 மே 2019 (12:58 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்க்ஷனை பெற்றது. 
 
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது.  இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்த நடிகை ஷாலு சம்மு. இவர் தற்போது அஜித் ஒருநாள் பெண்ணாக மாற வேண்டும் என்று  கூறி தல ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 
அதாவது சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த அவரிடம் ரசிகர் ஒருவர், ஒரு வேலை நீங்கள் அழகிய ஆணாக மாறினால் சினிமா உள்ள யாரை  டேட் செய்வீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாலினி ‘ அதற்கு அஜித் ஒரு நாள் பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவேன் ‘என்று கூறியுள்ளார். 


 
சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஷாலு சம்முவிடம் ரசிகர் ஒருவர்’ஒரு வேலை நீங்கள் அழகிய ஆணாக மாறினால் சினிமா நீங்கள் யாரை டேட் செய்வீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாலு,  "தற்கு அஜித் ஒரு நாள் பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவேன்" என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


 
இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்களின் புது முடிவு: கமல்-விஷால் அதிர்ச்சி