Webdunia - Bharat's app for daily news and videos

Install App

People’s Choice 2024 விருதை தட்டி சென்ற 2கே கிட்ஸின் ஃபேவரைட் நாயக, நாயகிகள்!

Prasanth Karthick
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:51 IST)
அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான விருதுகளில் ஒன்றான பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவில் இந்த ஆண்டின் சிறந்த கலைஞருக்கான விருதை BTS குழுவை சேர்ந்த ஜங் குக் வென்றுள்ளார்.



அமெரிக்காவில் திரைப்படம், இசை சார்ந்து வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள். இந்த விருதுகளில் ஜூரிகள் இல்லாமல் மக்களே விருதுக்கு உரிய கலைஞர்களை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த பீப்பில்ஸ் சாய்ஸ் விருது நிகழ்ச்சியில் திரைப்படங்கள், டிவி தொடர்கள், இசை ஆல்பங்கள் பல விருது பெற்றுள்ளன.

இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என மூன்று முக்கிய விருதுகளை சமீபத்தில் வெளியான பார்பி படம் வென்றுள்ளது. இதில் ரியான் கோஸ்லிங், மார்கெரெட் ரப்பி ஆகியோர் நாயகம், நாயகியாக நடித்திருந்தனர்.

சிறந்த ட்ராமாவில் நோலனின் ஓப்பென்ஹெய்மர் விருது வென்றுள்ளது. ஹங்கர் கேம்ஸ் திரைப்படம் சிறந்த ஆக்‌ஷன் படத்திற்கான விருதை வென்றுள்ளது.

ALSO READ: கருப்பன் எங்க குலசாமி! ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடலை வெளியிட்ட அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன்!

இசை பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த ஆண் இசைக்கலைஞருக்கான விருதை புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS ஐ சேர்ந்த ஜங் கூக் வென்றுள்ளார். அதுபோல ஆண்டின் சிறந்த பெண் இசைக்கலைஞருக்கான விருதை 2கே கிட்ஸின் மற்றுமொரு ஃபேவரிட் பாடகியான டெய்லர் ஸ்விப்ட் வென்றுள்ளார். பாப் ஆர்டிஸ்ட்டுக்கான விருதையும் டெய்லர் ஸ்விப்ட் வென்றுள்ளார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த பாடலாக ஒலிவியா ரெட்ரிகோவின் “வேம்பைர்” பாடல் தேர்வாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments