Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தாலிக்கான ஆஸ்கர் ப‌ரிந்துரைகள்

இத்தாலிக்கான ஆஸ்கர் ப‌ரிந்துரைகள்
, திங்கள், 24 செப்டம்பர் 2012 (16:02 IST)
FILE
இத்தாலியில் விடாக்கண்டன் ஃபிலிம் மேக்கர்ஸ் ஒரு டஜனுக்கும் அதிகம் இருக்கிறார்கள். கேன்ஸ், பெர்லின் என முக்கிய திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் கலக்குகின்றன. ஆனால் ஆஸ்கர் விஷயத்தில் 1999ல் வென்றதோடு ச‌ரி. அதற்குப் பிறகு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை இத்தாலிய படம் ஒன்று இதுவரை வாங்கியதில்லை. சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் இதற்காக வருந்தவில்லையென்றாலும் சராச‌ரி ஜனங்களுக்கு ஆதங்கம் இருக்கிறது.

இந்தமுறை 27 திரைப்படங்கள் ஆஸ்கர் ப‌ரிந்துரைக்காக வந்துள்ளன. இந்த 27ல் சிறந்த ஐந்து திரைப்படங்களை அங்குள்ள ஜு‌ரிகள் தேர்வு செய்துள்ளனர். நம்மூ‌ரில் வழக்கு எண், 7ஆம் அறிவு. கேங்ஸ் ஆஃப் வாஸேபேர் என்று பத்து படங்களை தேர்வு செய்தார்களே.. அந்த மாதி‌ி. இந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றை வரும் 26ஆம் தேதி தேர்வு செய்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பயிருக்கிறார்கள்.

ஐந்தில் எந்தப் படம் தேர்வாகப் போகிறது?

இந்த கேள்விக்கு ஜு‌ி குழு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது. பெர்லினில் விருது வென்ற சீஸர் மஸ்ட் டை, கேன்ஸில் ஜு‌ி விருது வாங்கிய ‌ரியாலிட்டி ஆகிய படங்கள் இந்த ஐந்தில் உள்ளன. மேலும் டர்மண்ட் பியூட்டி படமும் போட்டியில் உள்ளது. இந்த மூன்றுமே மிகச்சிறப்பான படங்கள். இதில் எதை விடுத்தாலும் சர்ச்சையும், விமர்சனமும் கிளம்பும்.

நம்முடைய சாய்ஸ் சீஸர் மஸ்ட் டை. அப்படியே தவறினால் ‌ரியாலிட்டி.

பார்ப்போம் இத்தாலி ஜு‌ரிகள் எந்தப் படத்தை தேர்வு செய்கிறார்கள் என்று.

Share this Story:

Follow Webdunia tamil