Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோலி பண்டிகையின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன...?

Webdunia
ஹோலிப் பண்டிகை இந்த வருடம் மார்ச் 9-ம் தேதி கொண்டாடப்படும். ஹோலி பண்டிகை வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து இந்திய மாநிலத்தைச் சார்ந்தவர்களாலும் கொண்டாடப் படுகிறது என்பதும் உண்மை. ஹோலியின் சிறப்பே அதில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் தான்.
ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை தூவி நன்கு சந்தோஷமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடிருப்போம். ஆனால் அவ்வாறு தூவி விளையாடும்போது சருமத்தில் படும் வண்ணப் பொடிகளில் உள்ள வண்ணங்களைப் போக்குவது என்பது மிகவும் கடினமானது. மேலும் இந்த  பொடிகளினால் நிறைய சருமப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
ஹோலி கொண்டாட்டத்தின் போது தலை முடியை பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள். ஏனெனில் ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் வண்ணப் பொடிகள் எளிதில் வேர்  வரை சென்று ஒட்டிக் கொள்ளும். பிறகு அவற்றை அகற்றுவது சிரமம். ஹோலிக்குச் செல்லும் முன் தலைமுடியின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து  மசாஜ் செய்யவும்.
 
ஹோலி விளையாடும் முன்பு உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசவும் குறிப்பாக உங்கள் காதுகள் பின்னால் தடவவும். சருமத்தில் உதடுகளை பாதுகாக்க உங்கள்  உதடுகளில் லிப் தைலம் பயன்படுத்தவும். 
 
உங்கள் தோல் பாதுகாக்க டார்க் நிறம் ஆடையை அணியவும். ஹோலி விளையாடுவதற்கு முன்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது தோல் நீரேற்றம்  அதிகரிக்க வைக்கும்.
 
ஆபத்தான ரசாயன வண்ணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். கூந்தலை பாதுக்காத்துக்கொள்ள கூந்தலை மெல்லிய துணியால் முடி பாதுக்கத்துகொள்ளவும்.
 
ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாகப்  விற்று  வருகின்றனர்.
 
இதனால் சுற்றுசுழல், உடல்நலத்திற்கு கேடு ஏற்படுகிறது. அதனால் மக்கள் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு  ஹோலியை  கொண்டாடுங்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments