Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைரவர் வழிப்பாட்டால் சனீஸ்வரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்

பைரவர் வழிப்பாட்டால் சனீஸ்வரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்

பைரவர் வழிப்பாட்டால் சனீஸ்வரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.


 
 
அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.
 
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.
 
நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.
 
தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.
 
சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.
 
தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.
 
தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.
 
அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.
 
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.
 
அதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?