Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை ?

எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை ?
, ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:45 IST)
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப்  படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம்  என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
 
விபூதியை எடுக்க சில விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக  ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள வரிகளில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும்  கவனமாக எடுத்து அணியவேண்டும்.
 
கட்டை விரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
 
ஆள் காட்டி விரல்: ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
 
நடுவிரல்: நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
 
மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
 
சுண்டு விரல்: சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம்எற்படும்.
 
மோதிர விரல்- கட்டை விரல்: மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால்  உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
 
விபூதி அணியும் முறை:
 
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு   விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஞ்சநேயருக்கு உகந்த வழிபாட்டு தினங்களும் பலன்களும் !!