Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைக்கலாம்....?

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:39 IST)
பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்திற்கான பொருளாக கருதப்படுகிறது.
 
அலங்காரத்திற்காகவும் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பர். சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம்  குவியும்.
 
 
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
 
கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும்  மனகஷ்டம் தீரும்.
 
கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள்  கொண்டு வரும்.
 
சிரிக்கும் புத்தர் சிலையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
 
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments