Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்...?

Yama Deepam 1
, புதன், 14 செப்டம்பர் 2022 (18:10 IST)
மஹாளய பட்சத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரண பயம் நம்மைவிட்டு அகலவும் துர் மரணமின்றி  அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாம ல் வழிபட வேண்டும்.


மஹாளயபட்ச நாட்களில் குறிப்பாக மஹாளயபட்ச அமாவாசை அன்று  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

எமதீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழிபடலாம். இதனா ல், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடியின் றி  ஆரோக்கியமாக வாழலாம்.

யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும்,  இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை  தேவ மூர்த்தி, தேவதைகளை வணங்கி பிரார் த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளி லும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்தி களை உலக ஜீவன்களுக்கு உள்ள  எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள்  தானாகவே அமையும். அத் தீபத்தை நீங்கள் மஹாளய பக்ஷத்தில் வரும் மஹா பரணி நாளிலும் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். யம  தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகள் கை கூடுமா...?