Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவ்வகை தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்...

எவ்வகை தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்...
எந்த மனிதனும்தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான கருமங்களைச் செய்து கொள்வது  நல்லது. இந்து மதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி  பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட  புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர்.

 
அரசர் காலங்களில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றை பற்றிய தகவல்களை தெளிவாக காணலாம். அந்த வகையில் எந்தெந்த தானம் ஒருவர் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என  கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
 
அன்னதானம் - 3 தலைமுறைக்கு புண்ணியம்.
 
திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறை புண்ணியம்.
 
ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பித்ருக்களுக்கு உதவி - 6 தலைமுறைக்கு புண்ணியம்.
 
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை - 9 தலைமுறைக்கு புண்ணியம்.
 
முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் - 21 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பசுவின் உயிரை காப்பது - 14 தலைமுறைக்கு புண்ணியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவருக்கெல்லாம் மறுபிறவி ஏற்படுவதில்லை என சாஸ்திரங்கள் கூறுபவை...!