Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதன் பகவானுக்கு உகந்த மந்திரம் என்ன...?

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:56 IST)
புதன் பகவானுக்கு உகந்தது புதன் கிழமை. புதன் பகவானுக்கு உரிய ராசிகள் மிதுனமும் கன்னியும். புதன் பகவானுக்கு உரிய திசையாக வடகிழக்கு திசையைச் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். புதன் பகவானுக்கு உரிய அதிதேவதை மகாவிஷ்ணு.


புதன் பகவானின் பிரத்யதி தேவதையாக ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லுவார்கள். புதனுக்கு உரிய நிறம் வெளிர்பச்சை. உரிய வாகனம் குதிரை. புதன் பகவானுக்கு உரிய உலோகம் பித்தளை. புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சார்த்தி வேண்டிக்கொள்வது விசேஷமானது.

புதன்கிழமையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் புதன் ஓரை. புதன்கிழமை நாளில், புதன் ஓரையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார் புதன் பகவான்.

திருவெண்காடு ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள புதன் பகவானுக்கு புதன் கிழமையில், புதன் ஓரையில் வந்து வழிபட்டால், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் முழுவதுமாகத் தீரும். மனக்குழப்பமும் மனக்கிலேசமும் தீரும் என்பது ஐதீகம்.

புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்.

புதன் பகவான் ஸ்லோகம்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தத்தாள்வாய் பன்னொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி !

புதன் காயத்ரி மந்திரம்:

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத் !

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments