ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குருப்பெயர்ச்சி என்பது வாழ்வில் பல யோகங்களை, பூரண அருளை வழங்கும் ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சி ஆகும். சனிப்பெயர்ச்சி சர்வ தொல்லை.. குருப்பெயர்ச்சி குபேர வாழ்வு என்பார்கள். அப்படியான குரு பகவான் நவக்கிரஹங்களோடு ராசிக்கு ஏற்ப வெவ்வேறு கட்டங்களில் பொருந்துகிறார்.
அவ்வாறு ஒவ்வொரு கிரஹங்களோடும் குருபகவான் பொருந்துவதால் ஏற்படும் பலன்களை இங்கு காண்போம்.
சூரிய பகவான் நவகிரஹங்களில் மூத்தோன். அதிகார குணம் உடையவர். சூரியனோடு குரு பகவானும் ஒரே கட்டத்தில் பொருந்தும் ராசிக்காரர்கள் அதிகாரம் மிக்க பதவிகள், அரசு பதவிகளை பெறுவர். வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைவர்.
சந்திரன் குளிர்ச்சியையும், அமைதியையும் அளிக்கக்கூடியவர். சந்திரனோடு குரு பொருந்தும்போது யோகமான பலன்கள் கிடைத்து செல்வ செழிப்பில் மிதப்பார்கள். கௌரவ பதவிகள் தேடி வரும்.
செவ்வாயுடன் குரு ஒரே கட்டத்தில் சேரும்போது நிலம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். சொந்தமாக வீடு, நிலம், ஆபரணங்கள் வாங்கும் பாக்கியத்தை இந்த இணைப்பு அருளுகிறது.
குருவுடன் புதன் சேரும்போது தொழில், வியாபாரம் சில போட்டிகளை காணும். செலவு அதிகரிக்கலாம். குடும்ப அமைதி சற்று குறையலாம்.
குருவுடன் சனி சேரும்போது சிக்கல்கள் ஏராளமாக உண்டாகலாம். குடும்பத்தில் தகராறு, கடன் தொல்லை ஏற்படும். இந்த கட்ட சேர்க்கை கொண்ட ராசிக்காரர்கள் எதையும் போராடியே வெல்ல வேண்டி இருக்கும்.
குருவுடன் சுக்கிரன் சேர்ந்தால் அந்த ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எதையும் செய்து எதிலும் வெற்றியை காண்பார்கள். தொழில், வியாபாரங்களில் லாபம் குறைவாகவே இருந்தாலும் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
கேதுவுடன் குரு சேர்ந்தால் உயர் பதவிகள் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் பெருகும்.
ராகுவுடன் குரு சேர்கையில் அது பொருள் சேர்ப்புக்கு அருள் தரும். தானியங்கள், தங்கம் உள்ளிட்ட நவமணிகள் சேரும். குடும்ப அமைதிக்கு வழி தரும்.