Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனவில் பாம்பு வந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா...?

கனவில் பாம்பு வந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா...?
, புதன், 16 ஜனவரி 2019 (14:59 IST)
ஒரு சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக  இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். 
ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது. 
 
ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 
பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
 
பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று  பொருள்.
 
பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால்  பணக்காரன் ஆகலாம்.
 
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும்  அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை  தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (16-01-2019)!