Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதன் பகவானுக்குரிய வழிபாட்டு முறைகள் மற்றும் மந்திரங்கள் என்ன...?

Advertiesment
Budhan Bhagavan
, புதன், 19 அக்டோபர் 2022 (10:33 IST)
நமக்கு ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நமது கர்ம வினைகள் ஆகும். அதன்படி, நவகிரகங்கள் நமக்கு நல்லதையும், கஷ்டத்தையும் மாறிமாறி தருவார்கள். நவக்கிரகங்களை வேண்டி அவரவர்களுக்கு உரிய பரிகார பூஜை மற்றும் விரதம்  இருந்து, நமது கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். விரதம் இருந்து வழிபடலாம்.


கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான்  விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு. புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.

புதனின் பகவானுக்கு உகந்தது:

நிறம்  - பச்சை, தானியம் - பச்சை பயறு, நவரத்தினம் - மரகதம், உலோகம் - பித்தளை, பருவம் - இலையுதிர் காலம், பஞ்ச பூதம் - நிலம் ஆகும். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம். நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம். மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.

புதன் காயத்ரி மந்திரம்:

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே !
சுக ஹஸ்தாய தீமஹி !
தன்னோ புத : பிரசோதயாத் !

ஸ்லோகம்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றி !
பதந் தத்தாள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி !

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெய்வங்களை வழிபட உகந்த கிழமைகள் எது...?