Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகினி ஏகாதசி கடைப்பிடிப்பதற்கான காரணமும் பலன்களும் என்ன...?

Advertiesment
Lord Perumal
, வெள்ளி, 24 ஜூன் 2022 (16:59 IST)
குபேரன், தனது நித்ய சிவ பூஜைக்கு தேவையான நறுமணம் மிக்க மலர்களைப் பறித்துக் கொண்டு வருவதற்காகவும், யக்ஷ குலத்தினைச் சேர்ந்த ‘ஹேமமாலி’ என்ற இளைஞனை பணியில் வைத்திருந்தார்.


ஹேமமாலி சிவபூஜைக்குரிய மலர்களைக் கொய்தும் அதனை பூஜையில் சேர்க்காமல், நான் மனைவியின் மேலுள்ள மோகத்தால், சரியான நேரத்தில் மலர்களை கொண்டு சேர்க்காத காரணத்தால், குபேரனின் சாபத்திற்கு ஆளானான். குபேரன்ஹேமமாலிக்கு ‘குஷ்ட ரோக’ நோய் தொற்றி, நீ யக்ஷ குலத்திலிருந்து விலகி, காடுகளில் சுற்றி அவதிப்படக்கடவது என்று சாபம் அளித்தார்.

பின்னர் அலைந்து, திரிந்து, மார்க்கண்டேய மகரிஷி கூறியபடியே ஹேமமாலி, ஆஷாத மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று முழு நம்பிக்கையுடன் முழு உபவாசம் இருந்து, பகவான் விஷ்ணுவை முழு நேரமும் மனதில் ஜெபம் செய்து அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்து அடுத்த நாள் துவாதசி அன்று தனது விரதத்தை பூர்த்தி செய்தான்.

அந்த புண்ய பலன் காரணமாக, அவனது குஷ்ட ரோக நோய் நீங்கியது, மேலும் அவன் மீண்டும் யக்ஷ குலத்தின் அழகாபுரி நகரை அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை தொடங்கினான்.

இவ்வாறு, யோகினி ஏகாதசி மகிமையை, யுதிர்ஷ்டிரரிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், மேலும் கூறுகையில்; ஹே, அரசர்களில் சிறந்த யுதிர்ஷ்டிரா, “யார் ஒருவர் இந்த யோகினி ஏகாதசியை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் கடைப் பிடிக்கிறார்களோ அவர்களது அனைத்து பாவங்களையும் என் மனதுக்கு ப்ரியமான ‘ஏகாதசி தேவி’ அழிக்கிறாள். அதன் மூலம் அவர்கள் நல்வாழ்வு பெறுகிறார்கள்” என்று கூறி அருளினார்.

யுதிர்ஷ்ட்ரா, அவ்வாறு இந்த விரதத்தை மிகவும் பக்தி, சிரத்தையுடன் கடைபிடித்தவர்கள், 88,000 அந்தணர்களுக்கு அன்னமிட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த அளவிற்கு புண்ணியத்தினையும் பெறுவார்கள் என்று கூறி அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிர்ஷ்டிரரிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இந்த ‘யோகினி ஏகாதசி’ விரத கதையினைப் படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு ‘கோ தானம்’ செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வ ஏகாதசி விரத மகிமை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!