வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (12:38 IST)
செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே  உள்ளது. அதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன.
 
மகாலஷ்மி படத்திற்க்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதென்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை  முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் சிறந்த வசியமாகும்.
வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரை வைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை  நீங்கி செல்வம் கொழிக்கும்.
 
முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில்  வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியாக இருக்கும்.
சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகு கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும். அப்போதுதான் மகாலஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.
 
முக்கியமான காரியங்கள் பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி  ஓம்” என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
 
பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பண சம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக் கொள்ளவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பர்வதமலையில் ஏறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!.. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!..

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா!. பக்தர்கள் தரிசனம்...

திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூச திருவிழா.. இன்று தோரோட்டம்!...

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

அடுத்த கட்டுரையில்
Show comments