Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாக தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்காதா?

நாக தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்காதா?
, புதன், 5 செப்டம்பர் 2018 (13:12 IST)
மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவு உடையவை.


மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவு உடையவை.

 முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.

இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

நாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர்.

பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும். சகலவிதமான செல்வங்களையும் பெறலாம்.

நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-09-2018)!