Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்து - கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் இந்த மூலை

வாஸ்து - கணவன் மனைவி உறவை மேம்படுத்தும்  இந்த மூலை
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (00:38 IST)
பஞ்சபூதங்களில் ஒன்றான "நிலம்" மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை "நைருதி மூலை/குபேர மூலை" என்றும் கூறுவர்.   
 
 
தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது.    
 
அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது.    
 
மேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில தவிர்க்கப்படவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!