Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்க என்ன விரதம் இருக்க வேண்டும்?

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (19:15 IST)
பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகமாக கூறப்பட்டு வருகிறது.

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது சுமங்கலி பெண்கள் தாலி சரடை வைத்து பூஜை செய்து பூஜை முடிந்ததும், அந்த சரடை தங்கள் கணவனால் கட்டிக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் வரலட்சுமி பூஜையின் போது திருமணம் ஆகாத கன்னி பெண்கள் பூஜை செய்தால் நல்ல கணவர் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

வரலட்சுமியை நினைத்து மனதார வழிபாட்டால் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் தினத்தில் தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை 8 லட்சுமிகளாக அதாவது அஷ்டலட்சுமிகள் ஆக வழிபடுகிறோம், வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்டலட்சுமிகளை மனதார பூஜித்தால், இல்லத்தில் செல்வம் பெருகும் என்றும் நினைத்தது நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி அறிவிப்பு..!

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் குறைய வேண்டுமா? இதோ ஒரு வழி..!

சபரிமலை ஐயப்பன் உருவம் பொதித்த தங்க டாலர் விற்பனை.. ஆன்லைனிலும் வாங்கலாம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் நடந்து முடியும்! - இன்றைய ராசி பலன்கள் (12.04.2025)!

திருப்பரங்குன்றத்தில் காவடி, பால்குடம்.. களைகட்டும் பங்குனி உத்திரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments