Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை வரம் வேண்டுமா? சஷ்டி விரதம் கடைபிடியுங்கள்..!

murugan

Mahendran

, சனி, 27 ஜூலை 2024 (18:52 IST)
திருமணம் ஆகி நீண்ட காலங்கள் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் உடனே குழந்தை பிறக்கும் என்று முன்னோர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். 
 
குழந்தை இல்லாதவர்கள் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் இந்த நாட்களில் காலை நான்கு முப்பது மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி அதன் பின் முருகன் படத்திற்கு மாலை அணிவித்து கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.
 
ஆறு நாள் உபவாசம் இருந்து விரதத்தை முறைப்படி கடைபிடித்தால் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. காலையில் பட்டினியாகவும் மதியம் சிறிது சாதமும் இரவில் பழங்களைஉம் எடுத்துக் கொள்ளும் விரதம் இருக்க வேண்டும்.
 
மேலும் ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை சொல்லிக் கொண்டிருப்பது நல்லது. விரத நேரத்தில் காபி, டீ குடிக்க கூடாது. ஆனால் சிறிதளவு பால் அருந்தலாம். உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடனை அடைக்க வேண்டுமா? இந்த கணேச மந்திரத்தை சொல்லுங்கள்..!