Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகாசி விசாகம்: முருகன் அருளை பெற செய்ய வேண்டிய விரதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

murugan

Raj Kumar

, திங்கள், 20 மே 2024 (09:56 IST)
தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். மொத்தமாக இருக்கும் 27 நட்சத்திரங்களில் விசாகம் மற்றும் கிருத்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் முருகனுக்குரிய நட்சத்திரங்களாக இருக்கின்றன.



முருக பெருமானின் பிறப்பு நட்சத்திரமாக விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அது சிறப்பை பெற்ற நட்சத்திரமாக உள்ளது. அதே போல சிவ பெருமானின் நெற்றி கண்ணில் தோன்றிய கார்த்திகை பெண்கள்தான் முருக பெருமானை வளர்த்தனர் என்பதால் கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரமும் முருக பெருமானுக்கான நட்சத்திரமானது.

வைகாசி மாதத்தில் பௌர்ணமியும் விசாகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே முருகப்பெருமானின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. எனவே அந்த நாளைதான் வைகாசி விசாகம் என கொண்டாடுகிறோம். இந்த வருடம் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பல வகையான விரதங்கள் மற்றும் வழிபாடுகளை பின்பற்றுவதுண்டு.

webdunia


விரதங்கள்:

முழு உபவாசம்: முழு உபவாசம் என்பது முதல் நாள் சூரியன் உதித்தது முதல் மறுநாள் சூரிய உதயம் வரை உணவு நீர் எதுவும் அருந்தாமல் இருக்க கூடிய கடுமையான விரதமாகும். சிறுப்பிள்ளைகள், வயோதிகர்கள் போன்றவர்களுக்கு இந்த விரதம் ஏற்புடையதாக இருக்காது.

பால் பழ விரதம்: இந்த விரதத்தை பொறுத்தவரை பால் மற்றும் பழத்தை மட்டுமே ஒரு நாள் முழுவதும் உணவாக எடுத்துகொள்ள வேண்டும். வேறு எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.

ஒருவேளை மட்டும்: சிலருக்கு ஒரு நாள் முழுவதும் எல்லாம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. இன்னும் சிலருக்கு பால் உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் எல்லாம் மதிய வேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு மற்ற வேளைகளில் விரதம் இருப்பதுண்டு.

வழிப்பாடுகள்:

வைகாசி விசாகம் அன்று காலையும் மாலையும் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். கோவில் செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கும் சென்று பூஜை செய்யலாம். முருகனின் திருமுறைகளை அன்று ஓதுவதை சிலர் வழிப்பாட்டு முறையாக கொண்டுள்ளனர். மேலும் அன்றைய தினத்தில் தானம் தர்மம் செய்வது, முருகன் சிலைக்கு அலங்காரம் செய்தல் மற்றும் முருகனின் கதைகளை படித்தல் போன்றவற்றை பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான பண உதவி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன் (20.05.2024)!