ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதலாம் தேதி முதல் ஐயப்ப சாமி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட இருக்கும் நிலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி பிறக்க உள்ளதை அடுத்து ஐயப்ப சாமி கோவிலுக்கு மாலை போட பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
உலக புகழ்பெற்ற ஐயப்பசாமி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பதும் குறிப்பாக கார்த்திகை முதல் தேதி மாதம் விரதம் இருந்து மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கமான ஒன்று
இந்த நிலையில் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு ஐயப்பசாமி கோவிலுக்கு மாலை போட தயாராகி வருகின்றனர். கடைகளில் மாலை போடுவதற்கு தேவையான பொருட்களும் விற்பனையாகி வருவதாக தெரிகிறது. நேற்று முதல் கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் ஐயப்ப சாமி கோவிலுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது