இன்று செல்வ செழிப்பை தரும் ஏகாதேசி விரதம்!
இந்துக்கள் பல விரதங்கள் இருந்து வந்தாலும் அவற்றில் ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் என்பதால் திருமால் பக்தர்கள் இந்த விரதத்தை இருப்பார்கள்
ஏகாதேசி என்பது 15 நாட்களுக்கு ஒரு முறை வரும், ஒரு வருடத்திற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் செல்வ செழிப்பு மற்றும் வாழ்வுக்குப் பின் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என பல புராணங்கள் கூறுகின்றன. ஏகாதேசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் மற்றும் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. முந்திய நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது மிகவும் முக்கியம்
உடல் கோளாறு உள்ளவர்கள் பழங்கள் மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம். ஏகாதேசி அன்று இரவில் பஜனை செய்து திருமால் விஷ்ணு குறித்த நூல்களைப் படிக்க வேண்டும். இந்த விரதம் இருந்தால் பாவம் நீங்கும், வீட்டில் செல்வம் பெருகு,ம் சந்ததி வளரு,ம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்