Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு தும்பைப்பூ மாலை அணிவிப்பதால் என்ன பலன்கள்...?

Thumbai Poo Malai
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.


உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்து விட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

 பிரதோஷ காலத்தில் சிவா லயத்துக்குச் சென்றாலே புண்ணியம் என்கின்றன சிவயோக நூல்கள். பிரதோஷம் என்பது அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்பும் பெளர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் வரக்கூடியது. திரயோதசி திதியில் வருவதுதான். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை.

செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம் தோஷங்களையெல்லாம் விலக்கக்கூடியது. செவ்வாய்ப் பிரதோஷத்தில், அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக் கும் சிவலிங்கத் திருமேனிக் கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதில் கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக் கூடிய தோஷங்கள், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்  பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!