Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமானுக்கு நீலகண்டர் என பெயர் வரக்காரணம் தெரியுமா...!

Webdunia
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக  பிரதோஷம் வரும்.

 
பெயர் காரணம்:
 
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்  அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
 
திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது  ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட “நீலகண்டர்” என திருப்பெயர்ப்  பெறலானார் சிவபெருமான்.
 
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய  திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும்.  எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது. பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி  வரையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் பேசுவதில் குறைபாடா? இந்த கோவிலுக்கு போனால் உடனே சரியாகிவிடும்..!

சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது! - ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (21.05.2025)!

பழனியில் வைகாசி விசாகம்: 10 நாட்களும் திருவிழாக்கள் கொண்டாட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் இழுபறி இருக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (20.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments