திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 16ஆம் தேதி பாஷ்யங்கர் உற்சவம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதை எடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட கீழேதான் உள்ளது. ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே.
வடமாநிலங்களில் பாஷ்யங்கர் என அழைக்கப்படும் ராமானுஜரை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாஷ்யங்கர் உற்சவம் தொடங்கப்படும். ராமானுஜர் திருமலைக்கு வந்து காட்டை திருத்தி, வீடு அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்ததால் அவருக்கு இந்த மரியாதை திருமலையில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த பாஷ்யங்கர் உற்சவம் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி மே ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த 19 நாட்களும் உபய சமர்ப்பணம் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.