திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பது எப்போது?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:44 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த அளவுக்கு பிரபலமோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு திருப்பதி கோதண்டராமசாமி கோவில் பிரபலம் என்பதால் ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்கள் பலர் அந்த கோவிலுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்றைய தினம் கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஜனவரி இரண்டாம் தேதி அதிகாலை 01.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஆன்மீக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments