கரூரில், இறைவனுக்கு பறித்த பூக்களை பட்டத்து யானை தட்டிவிட்டதால் கோபமுற்ற எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கையை துண்டித்த ஆன்மீக வரலாற்று செயல் விளக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் வளாகத்தில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.
64-நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இறைவன் ஈசனுக்கு சாட்டுவதற்கு நந்தவனத்தில் பூக்களை பறித்து வரும் போது புகழ் சோழானின் பட்டத்து யானை மதம் பிடித்தவாறு வந்து எரிபத்த நாயனாரின் கையில் பூக்குடலையில்வைத்திருந்த பூக்களை தட்டிவிட்டது. இதனால் கோபமடைந்த எறிபத்த நாயனார் மழு எனப்படும் கோடாலியால் யானையின் தும்பிக்கையை துண்டித்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னன் புகழ் சோழன் இறைவனுக்கு பறித்த பூக்களை தட்டிவிட்டதால் தானே அதற்குமுழு பொறுப்பு என கூறி தனது உடைவாலை உருவி தனது தலையை துண்டிக்க கூறினார். இதனை அறிந்து அங்கு தோன்றிய இறைவன் எறிபத்த நாயனாரின் பக்தியையும்,மன்னனின் எண்ண ஓட்டங்களையும் அறியவே இத்திருவிளையாடலை நடத்தியதாக கூறி யானையை உயிர்ப்பித்தார். இந்த வரலாற்று பின்னனிகொண்ட ஆன்மீக செயல்விளகத்தை தத்ரூபமாக சிவனடியார்கள் நடித்து காட்டிய இத்திருவிழாவில் ஆண்கள்,பெண்கள்ம்குழந்தைகள் மற்றும்பக்தர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறைவனின் திருவிளையாடலை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்கள் பூக்குடலையில் கொண்டு வந்த பூக்களுடன் கரூர்நகரின் முக்கிய வீதிகள்வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் பசுபதீஸ்வரா ஆலயத்தை வந்தடைந்தனர்.