தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும். அதுமட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.
மாதந்தோறும் திருவோண நாளில் திருமாலை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனம் சீராகும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும், இன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.