Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாசி மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் குடும்ப ஒற்றுமை மேம்படும்..!

Advertiesment
Masi Magam

Mahendran

, செவ்வாய், 11 மார்ச் 2025 (19:36 IST)
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வருடம் தோறும் மகம் நட்சத்திரம் வரும் போதெல்லாம் வழிபாடுகள் நடத்தப்பட்டாலும், மாசி மாதத்தில் அது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 
 
சிம்ம ராசியில் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் நிற்பதை 'மாசி மகம்' என்று அழைப்பர். இந்த நாளில் தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த புனித நாளை ‘கடலாடும் நாள்’ மற்றும் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றழைக்கின்றனர்.
 
புராணக் கதையின்படி, வருண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தால் கடலில் சிக்கியிருந்தார். இதனால் உலகம் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொள்க, ஈசன் வருணனை விடுவித்தார். மனமகிழ்ந்த வருணன், "மாசி மகம் அன்று தீர்த்ததானம் செய்யும் பக்தர்களின் பாவங்களை நீக்க வேண்டும்" என வேண்டினார். சிவன் அதை ஏற்று வரமளித்ததால், அந்த நாளில் தீர்த்தமாடல் வழக்கம் தொடங்கியது.
 
இந்த நாளில் விரதம் இருந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவனை ஆராதித்தால், பிறவி துன்பங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. முக்கிய புண்ணிய தலங்களில் நீராடுவதால் சகல தோஷங்களும் நீங்கி குடும்ப ஒற்றுமை மேம்படும் என்பது ஐதீகம். மேலும், அன்னை உமாதேவி தட்சனின் மகளாக மாசி மகத்தில் அவதரித்ததாகவும், அம்பாளை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
     
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா! ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது!