Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடன்களை வெகு சீக்கிரமே அடைக்க உகந்த நேரம் உண்டு தெரியுமா!

கடன்களை வெகு சீக்கிரமே அடைக்க உகந்த நேரம் உண்டு தெரியுமா!
மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங்கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்னைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறைகளையும் விளக்கியிருக்கிறார்கள். 

 
விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச்  சொன்னார்கள். இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இந்த முகூர்த்தம், கடன்களை அடைக்க உகந்த  நேரமாக உள்ளது. 
 
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க  மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி,  மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில்  பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். 
 
ராசிகளுக்கேற்ற பொது மைத்ர முகூர்த்த நேரத்தை அறிந்து கொள்ளுங்கள். 
 
மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி 
 
ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை 
 
மிதுனம் - புதன் காலை 7:30 - 9 
 
கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6 
 
சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30 
 
கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30 
 
துலாம் - சனி காலை 10:30 - 12:00 
 
விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30 
 
தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12 
 
மகரம் - சனி காலை 8 - 10:30 
 
கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30 
 
மீனம் - வியாழன் காலை 3 -10:30.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா? இதுதான் அந்த 4 அறிகுறிகள்