Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரதம் இருப்பது எதனால்? விரதம் எப்படி இருக்க வேண்டும்

Mahendran
வியாழன், 8 பிப்ரவரி 2024 (18:29 IST)
விரதம் என்பது நமது கலாச்சாரத்தில் உள்ளது. இது இறை நம்பிக்கைகாக மட்டுமின்றி உடல்நலனுக்காகவும் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
 
இறைவனை வழிபடுவதற்கும், அவரது அருளைப் பெறுவதற்கும்.  பாவங்களைப் போக்கிக்கொள்ளவும், மன அமைதியை பெறவும், நன்றி செலுத்துவதற்கும், வேண்டுதல்களை நிறைவேற்றவும் விரதம் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு அறிவியலும் உண்டு.
 
 உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரண அமைப்புக்கு ஓய்வு கொடுக்கவும்,  உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும்,  மன அழுத்தத்தை குறைக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் விரதம் கடைபிடிக்கப்படுகிறது
 
விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் இலகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
 
தியானம், பஜனை, யோகா போன்ற ஆன்மீக செயல்களில் விரதத்தின்போது  ஈடுபடுவது நல்லது. விரதம் முடிந்ததும், திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். விரதம் இருப்பதில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக விரதத்தை முறித்து மருத்துவரை அணுக வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments