Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீவித்யை வழிபாட்டில் நித்யா தேவியரின் சிறப்பு.. அமைதி, செல்வம் மற்றும் துன்பங்கள் தீரும்..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (18:50 IST)
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர வடிவில் அர்ச்சிக்கும் முறையே “ஸ்ரீவித்யை”. இம்முறையில், லலிதையின் அமிர்தத்திலிருந்து தோன்றும் 15 அம்சங்கள், பதினைந்து நித்யா தேவிகளாக உருவாகி, மாதந்தோறும் கிருஷ்ண மற்றும் சுக்ல பட்ச நாட்களில் ஒவ்வொரு திதியையும் ஆண்டு ஆட்சி செய்கின்றன. இந்த தேவிகளுக்கு உரிய நாள்களில் வழிபாடு செய்தால் மனதிற்கு அமைதி, செல்வம் மற்றும் துன்பங்கள் தீரும்.
 
1. மஹா வஜ்ரேஸ்வரி
வஜ்ர சக்தியின் திருவுருவம். நான்கு கரங்களுடன் செந்நிற பூமாலை, வைடூரிய கிரீடம் கொண்டு காட்சியளிக்கிறாள்.
வழிபாட்டு திதி: வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி.
மந்திரம்: ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை...
 
2. சிவதூதி
சிவனை தூதாக அனுப்பிய போர்க் கடவுள். எட்டுக் கரங்களுடன் ஆயுதங்கள் ஏந்தி, பக்தர்களை பாதுகாக்கிறாள்.
வழிபாட்டு திதி: வளர்பிறை சப்தமி, தேய்பிறை நவமி.
மந்திரம்: ஓம் சிவதூத்யை...
 
3. த்வரிதா
விரைந்து அருள் புரியும் தேவியாவாள். கருநிறம், நாகாலங்காரம் கொண்டவள்.
வழிபாட்டு திதி: வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி.
மந்திரம்: ஓம் த்வரிதாயை...
 
4. குலசுந்தரி
குண்டலினி சக்தியின் வடிவம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கரங்களுடன் ஞானம் வழங்குபவள்.
வழிபாட்டு திதி: வளர்பிறை நவமி, தேய்பிறை சப்தமி.
மந்திரம்: ஓம் குலசுந்தர்யை...
 
5. சர்வாத்மிகா
உலகை இயக்கும் சக்தியாக விளங்கும். சூரிய ஒளியைப் போல் பிரகாசிக்கும் நித்யை.
வழிபாட்டு திதி: வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி.
மந்திரம்: ஓம் நித்யா பைரவ்யை...
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் சற்று அதிகரிக்கலாம்! இன்றைய ராசி பலன்கள் (26.07.2025)!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: உலகிற்கே முதல் பிள்ளையார்: தொன்மை சிறப்புகள்!

அம்பிகையே.. ஈஸ்வரியே..! ஆடி மாதத்தில் கூற 108 அம்மன் போற்றி மந்திரங்கள்!

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments