Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகுண்ட ஏகாதசி 2024! ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பின் சிறப்புகள்! | Vaikunda Ekadasi 2024

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (11:06 IST)

விஷ்ணு பெருமாள் கோவில்களில் சிறப்பு மிகுந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 30 தொடங்குகிறது.

 

 

திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அமைந்துள்ள ரெங்கநாதர் திருக்கோவில் பூலோக சுவர்க்கம் என வருணிக்கப்படுகிறது. இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், சொர்க்க வாசல் திறப்பும் புகழ் வாய்ந்தவை.

 

இந்த வைகுண்ட ஏகாதசி உருவானதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. திருவரங்கத்திலே பெருமாளுக்கு திரு ஊழியம் செய்ய வாழ்வை அர்ப்பணித்தவர் திருமங்கையாழ்வார். அவரது அர்ப்பணிப்பில் திளைத்த ஸ்ரீரங்கநாதர் அவர் முன் தோன்றி வேண்டும் வரம் கேட்டார். அப்போது நம்மாழ்வார் பரமபதம் அடைந்த திருவாய் மொழிக்காக திருவிழா நடைபெற வரம் கேட்டார். அப்படியே ஸ்ரீரங்கநாதரும் அருளினார். நம்மாழ்வார் பரமபதம் அடைந்த இந்நாளில் ஸ்ரீரங்கநாதரை ஷேவித்து ஆழ்வார்களின் பாராசுரங்களை பாடுவதன் மூலம் நற்கதி அடைய முடியும்.

 

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30 அன்று தொடங்கி 2025 ஜனவரி மாதம் 20ம் தேதிவரை நடைபெற உள்ளது. டிசம்பர் 30 அன்று திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்குகிறது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிசம்பர் 31 அன்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

 

ஜனவரி 9ம் தேதி மோகினி அலங்காரம், ஜனவரி 10ம் தேதி சிகர நிகழ்வாக பரமபத வாசல் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகின்றன. ஜனவரி 16 - திருக்கைத்தல சேவை, ஜனவரி 17 - திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வு, ஜனவரி 19 - தீர்த்தவாரி, ஜனவரி 20 - நம்மாழ்வார் மோட்சம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

 

சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தை மேற்கொள்பவர்கள் மறுமையில் நேரடியாக சொர்க்கத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் சொர்க்க வாசல் திறப்பிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் வெற்றியாக மாறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.12.2024)!

சிவபெருமானுக்கு அபிஷேக பெருமான் என்ற பெயர் வந்தது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(20.12.2024)!

பஞ்சகுரோச ஸ்தலங்கள் தமிழகத்தில் எங்கே இருக்கின்றன தெரியுமா?

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments