தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

Mahendran
சனி, 6 ஏப்ரல் 2024 (18:51 IST)
ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இன்று கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் அவர்களால் கட்டப்பட்ட நிலையில் உலகப் புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரைத் திருவிழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் நிலையில் இந்த திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது

இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததாகவும் கொடிமரம் அருகில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பகைகள் விலகும்! - இன்றைய ராசி பலன்கள் (05.10.2025)!

முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை விரதம்: பலன்களும் முறைகளும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (04.10.2025)!

வரும் திங்கட்கிழமை பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

திருப்பதியில் கோலாகலமாக நிறைவடையும் பிரம்மோற்சவ விழா: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments