தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (19:04 IST)
சென்னை தியாகராய நகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது இந்த கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
தினமும் காலை ஏ7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தேவஸ்தான குழு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - மகரம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - விருச்சகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - கன்னி

அடுத்த கட்டுரையில்
Show comments