Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுக்கிரவார பிரதோஷமும் சிவ வழிபாட்டு பலன்களும் !!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (12:29 IST)
சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் போல், சனிக்கிழமையில் வரும் மகா பிரதோஷம் போல், சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று வருகிற பிரதோ ஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது.


வெள்ளிக் கிழமை  பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை கள் தீரும். நிதி நெருக்கடி நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் பிரச்சினை தீர ருண விமோசன பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்வது போல சுக்கிரவார பிரதோஷ நாளிலும் சிவ தரிசனம் செய்யலாம்.

பிரதோஷ நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். நாளைய தினம் 16 வகையான பொருட்களால் கண்கள் குளிர, நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். நந்தி, சிவ பெருமானுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது. இன்று செப்டம்பர் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்யுங்கள். கடன் பிரச்சினை தீரும் கவலைகள் பறந்தோடும்.

வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments