Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்மிகத்தில் கூறப்படும் குண்டலினி சக்தி என்றால் என்ன தெரியுமா!

ஆன்மிகத்தில் கூறப்படும் குண்டலினி சக்தி என்றால் என்ன தெரியுமா!
குண்டலினி சக்தி உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் தனது சக்திகளை கொடுத்து உடம்பில் உள்ள எல்லா இயக்கங்களையும், உணர்வுகளையும் இன்ப, துன்பங்களையும் கோப, தாபங்களையும் நிர்வாகம் செய்து உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி  ஆகியவற்றையும் சீராக பாதுகாத்து வருகிறது.

 
 
இதுமட்டுமல்ல, உடம்பில் உள்ள ஆயிரக்கணக்கான நாடிகளையும், குண்டலினி சக்தியே பாதுகாக்கிறது. நாடி சுத்தியின் மூலம்  மேல் துருவ எழுச்சியை மேற்கொள்ளும் குண்டலினி சக்தி பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்கிறது.
 
மூல நெருப்பு என்ற குண்டலினி சக்தி எப்படி நாடிகள் வழியாக பயணப்படுமென்று சந்தேகம் தோன்றும். குண்டலினி சக்தி  என்பதும், உருவமே இல்லாத மின்சாரத்தை போன்ற ஒருவித அதிர்வுதான். இந்த அதிர்வு, தான் தோன்றிய இடத்திலிருந்து  செல்ல வேண்டிய இடத்திற்கு அதாவது பிரம்மா கபாலத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல்களை நீக்கி  வழியை சுத்தப்படுத்துவது மட்டும் தான் நாடிகளின் முக்கிய பணியாகும்.
 
தனித்தனியாக பகுதி பகுதியாக நமது உடம்பிற்குள் ஆயிரம் உறுப்புகள் இருந்தாலும், அவைகள் அனைத்திற்கும் மூல கருவாக  இருப்பது குண்டலினி சக்தியே ஆகும். இந்த பேரின்ப சக்தி, எழுச்சியை அடையாமல் இருக்கும் நேரம் மூலாதாரத்தில் உறங்குவது போல் படுத்துக்கிடக்கிறது.
 
குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து கிளம்பி, சகஸ்ரத்தை சுழுமுனை நாடி வழியாக சென்று அடையும் போது, ஆறு ஆதாரங்களை கடந்து செல்கிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மனிபூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞா ஆகிய ஆறு  ஆதாரங்களை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் மனம் என்று யோக சாஸ்திரம் உருவாக பெயரிட்டு  அழைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைவழிபாட்டில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன...?