Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்மிகம் கூறும் ஏழு சக்கரங்களும் அதன் செயல்பாடுகளும்...

ஆன்மிகம் கூறும் ஏழு சக்கரங்களும் அதன் செயல்பாடுகளும்...
உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான். கோபம், துயரம், அமைதி,  ஆனந்தம், பேரானந்தம் என அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலையிலான வெளிப்பாடு. அதனால் இந்த சக்கரங்கள் என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இருக்கும் ஏழு பரிமாணங்கள்.



இந்த ஏழு சக்கரங்கள்:
 
1. மூலாதாரம் – ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது 
2. ஸ்வாதிஷ்டானம் – பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது 
3. மணிபூரகம் – தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது 
4. அனாஹதம் – விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது 
5. விஷுத்தி – தொண்டை குழியில் 
6. ஆக்னா – புருவ மத்தியில் 
7. சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் – உச்சந்தலையில்
 
சக்கரங்களின் குணங்கள்: 
 
உங்கள் சக்தி மூலாதாரத்தில் ஓங்கி இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உணவும், தூக்கமும்தான் பிரதானமாக இருக்கும். 
 
உங்கள் சக்தி ஸ்வாதிஷ்டானத்தில் ஓங்கி இருந்தால், இன்பங்களை பின்தொடர்ந்தே தான் உங்கள் வாழ்க்கை இருக்கும் (அ)  உடல் அளவிலான பல வகையான இன்பங்கள் உங்களை ஆக்கிரமிக்கும். 
 
உங்கள் சக்தி மணிபூரகத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் செயல்வீரராக இருப்பீர்கள்; உலகத்தில் பல செயல்கள் செய்ய  முனைவீர்கள். 
 
உங்கள் சக்தி அனாஹதத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பீர்கள். 
 
உங்கள் சக்தி விஷுத்தியில் ஓங்கி இருந்தால், நீங்கள் சக்திமிக்கவராக இருப்பீர்கள். 
 
உங்கள் சக்தி ஆக்னாவில் ஓங்கி இருந்தால், அல்லது நீங்கள் ஆக்னாவை அடைந்துவிட்டால், புத்தி அளவில் நீங்கள்  உணர்ந்துவிட்டவர் ஆவீர்கள். இந்த நிலை உங்களுக்கு அமைதியைத் தரும்.
 
சஹஸ்ராரத்தை எட்டிடும்போது, விவரிக்க முடியாத பேரானந்தத்தில் திளைத்திடுவீர்கள். உங்கள் சக்தி சஹஸ்ராரத்தை  அடையும்போது, பித்துப் பிடித்தாற் போன்ற பேரானந்தமே உங்கள் நிலையாகும். வெளியிலிருந்து எவ்வித தூண்டுதலும்  இல்லை, எந்தக் காரணமும் இல்லை, என்றாலும் உங்கள் சக்தி ஒரு உச்சத்தை அடைந்துவிட்டதால் பேரானந்தக் களிப்பில்  திளைப்பீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்தர்களின் மூல மந்திரங்களை தெரிந்து கொள்வோம்...